அம்மாபேட்டை, ஒலகடத்தில் காசநோய் ஒழிப்பு, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

அம்மாபேட்டை, ஒலகடத்தில் காசநோய் ஒழிப்பு, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்
X

ஒலகடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, ஒலகடத்தில் காசநோய் ஒழிப்பு, டெங்கு, மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் நேற்று (நவ.16) நடைபெற்றது.

அம்மாபேட்டை, ஒலகடத்தில் காசநோய் ஒழிப்பு, டெங்கு, மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் நேற்று (நவ.16) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரத்தை சேர்ந்த அம்மாபேட்டை மற்றும் ஒலகடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் ஒழிப்பு, டெங்கு, மழைக்கால நோய்கள் தடுப்பு, பாதுகாப்பான குடிநீர் அவசியம் குறித்து சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றது.


ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் ஆலோசனையின் படி நடைபெற்ற இந்த முகாம்களில் காச நோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், மழைக்கால நோய்கள் அதன் பாதுகாப்பு வழிமுறைகள், சுற்றுப்புற சுகாதார பராமரிப்பு வழிமுறைகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், பாதுகாப்பற்ற குடிநீரால் பரவும் நோய்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இந்த இரு முகாம்களிலும் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர்கள் மரு.பிரசாந்த் மரு.பிருந்தா காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜயசேகர், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், சுகாதார ஆய்வாளர்கள் கருணாமூர்த்தி, யோகேஸ்வரன், ஸ்ரீநாத், மருந்தாளுநர்கள் ஜெகதீஸ்வரி, சண்முகம், செவிலியர்கள் பார்கவி, அனிதா மற்றும் பொதுமக்கள் 120 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இம்முகாம்களில் கலந்து கொண்டவர்களுக்கு நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழு மூலமாக மார்பக நுண்கதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!