கருமாண்டம்பாளையத்தில் காசநோய், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

கருமாண்டம்பாளையத்தில் காசநோய், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
X

விழிப்புணர்வு முகாமில் காசநோய்க்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பயனாளிகளுக்கு மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி வழங்கிய போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கருமாண்டம்பாளையத்தில் காசநோய், தொழுநோய் ஒழிப்பு மற்றும் மழைக்கால நோய்கள், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (26ம் தேதி) நடந்தது.

மொடக்குறிச்சி அருகே உள்ள கருமாண்டம்பாளையத்தில் காசநோய், தொழுநோய் ஒழிப்பு மற்றும் மழைக்கால நோய்கள், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (26ம் தேதி) நடந்தது.

ஈரோடு மாவட்டம் சிவகிரி வட்டாரம் கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட கிளாம்பாடி பேரூராட்சி பகுதியில் கருமாண்டம்பாளையம் கொங்கு மஹாலில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமில் காசநோய், தொழுநோய் ஒழிப்பு, மழைக்கால நோய்கள், டெங்கு தடுப்பு மற்றும் பாதுகாப்பான குடிநீரின் அவசியம் குறித்து சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


முன்னதாக, முகாமில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி பார்வையிட்டு காச நோய்க்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பயனாளிகளுக்கு நுண்கதிர் பட பரிசோதனை முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து, ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கு உண்டான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டியவர்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மழைக்கால நோய்கள் அதன் பாதுகாப்பு வழிமுறைகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், பாதுகாப்பற்ற குடிநீரால் பரவும் நோய்கள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு சுய மருத்துவம் தவிர்த்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம் குறித்து தெரிவிக்கப்பட்டது.


மேலும், தொழு நோயின் ஆரம்ப அறிகுறிகள் தொழு நோய்க்கான இலவச சிகிச்சை கிடைக்கும் இடங்கள், தொழு நோயினால் ஏற்படும் பாதிப்புகள், தொழுநோய்க்கான ஆரம்ப நிலை கண்டறிதலின் அவசியம், குடும்ப நலத்துறையின் மூலமாக வழங்கப்படும் தற்காலிக, நிரந்தர கருத்தடை முறைகள் குறித்து சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இந்த முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் (பொறுப்பு) மரு. மணிவண்ணன், கிளாம்பாடி பேரூராட்சி தலைவர் அமுதா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பாலகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தோமதாஸ், வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மகாலிங்கம், குடும்ப நல விரிவாக்க கல்வியாளர் ஆறுமுகம், ஆய்வக நுட்புநர் தனலட்சுமி, சுகாதார ஆய்வாளர்கள் மணி, சதீஷ் குமார், தங்கவேல், உதயகுமார், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் 150 பேர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய், தொழுநோய், டெங்கு, குடும்ப நல விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும், முகாமில் கலந்து கொண்ட காச நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு இலவச நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழு மூலமாக மார்பக நுண்கதிர் பட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!