தாளவாடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தாளவாடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
X

கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி.

தாளவாடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 2 மணி நேரம் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி மரபாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதையின் 6-வது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்ய ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிரேன் வரவழைக்கப்பட்டு் லாரியை மீட்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து தொடங்கியது. திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி