பெருந்துறை அருகே லாரி டிரைவர் உயிரிழப்பு

பெருந்துறை அருகே லாரி டிரைவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

பெருந்துறை அருகே லாரியில் தூங்கிய டிரைவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு கருங்கல்பாளையம், பூங்குன்றனார் வீதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். லாரி டிரைவர். சம்பவத்தன்று, கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சல்பேட் பவுடர் பாரம் ஏற்றிக்கொண்டு மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு புறப்பட்டார். இந்நிலையில், பெருந்துறை சிப்காட் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திவிட்டு, படுத்து தூங்கி உள்ளார்.

இதில் அவர் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்