கோபி கச்சேரிமேட்டில் தனியார் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து

கோபி கச்சேரிமேட்டில் தனியார் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து
X

விபத்துக்குள்ளான பேருந்து.

கோபி கச்சேரிமேட்டில் தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஈரோட்டில் இருந்து பண்ணாரி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.பேருந்தின் ஓட்டுனராக இண்டியம்பாளையத்தை சேர்ந்த ஞானசேகரும், நடத்துனராக துறையம்பாளையத்தை சேர்ந்த பூபதியும் பணியில் இருந்தனர்.

பேருந்து ஈரோட்டில் இருந்து கோபி பேருந்து நிலையம் வந்து, அங்கும் 40 பயணிகளை ஏற்றுக்கொண்டு , கச்சேரிமேடு, சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து கச்சேரிமேடு அருகே சென்ற போது, சேலத்தில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு கோபி கச்சேரிமேட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் நோக்கி சென்ற லாரியை அதன் ஓட்டுநர் சேலத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர் திடீரென பின்னோக்கி வந்துள்ளார்.

இதில் பண்ணாரி நோக்கி சென்ற தனியார் பேருந்தின் பக்கவாட்டில் லாரி மோதியது.லாரி மோதுவது போல் வருவதை பார்த்த பேருந்தின் ஓட்டுநர் வேகமாக பேருந்தை இயக்கியும், லாரி மோதியது. பேருந்தின் ஓட்டுனர் உடனடியாக பேருந்தை இயக்கி இருக்காவிட்டால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும்.

இதனால் கோபி சத்தி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுதுவிபத்து குறித்து தகவல் அறிந்த கோபி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு