சத்தியமங்கலம் அருகே மினி வேன் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் சாவு

சத்தியமங்கலம் அருகே மினி வேன் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் சாவு
X

பைல் படம்

சத்தியமங்கலம் அருகே மினி வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள பூனாச்சி பகுதியை சேர்ந்தவர் சிவகணேசன். விவசாயியான இவர் வெங்காய லோடுடன், மினி வேனில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மினி வேனை மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது சத்தியமங்கலம் அடுத்த புங்கம்பள்ளி அருகே சென்ற போது, எதிரே வந்த லாரி மினி வேன் மீது பலமாக மோதியது.

இதில் மினி வேனில் முன்பகுதியில் அமர்ந்து கொண்டு சென்ற சிவகணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் மணிகண்டன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்