கள்ளிப்பட்டியில் கருணாநிதி சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

கள்ளிப்பட்டியில் கருணாநிதி சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
X

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கு ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Erode Today News - கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாள் இன்று (7ம் தேதி) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, அரசியல் பிரமுகர்களும், கட்சி தொண்டர்களும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக பல இடங்களில் திமுகவினர் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி பிரிவில் உள்ள கருணாநிதி சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், கோபி நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ், சத்தியமங்கலம் நகர் மன்ற தலைவர் ஜானகி ராமசாமி, டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture