டிரைவர் மீதான தாக்குதலை கண்டித்து போக்குவரத்து பணியாளர்கள் போராட்டம்

டிரைவர் மீதான தாக்குதலை கண்டித்து போக்குவரத்து பணியாளர்கள் போராட்டம்
X
தாளவாடி அருேக டிரைவர் மீதான தாக்குதலை கண்டித்து பஸ்களை நிறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரை சேர்ந்தவர் பங்காரு (வயது 53). பனஹள்ளி கிராமத்தில் இருந்து தாளவாடிக்கு, நேற்று மதியம் பஸ்சை இயக்கி சென்றுள்ளார். அப்போது, பஸ்சின் பின்னால் தமிழ்புரத்தை சேர்ந்த சிவநாதன் (வயது 36) குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்தார். இதனையடுத்து, இருசக்கர வாகத்திற்கு வழி விடவில்லை என்று கூறி, மல்லன் குழி நிறுத்தத்தில் பஸ் நின்றபோது, டிரைவரிடம் வாக்குவாதம் செய்தார். மேலும், தான் வைத்திருந்த பிளாஸ்டிக் பைப்பால் டிரைவரை தாக்கியுள்ளார். இதை கண்டித்து வாலிபரை கைது செய்ய கோரி அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!