அத்தாணி அருகே பயிற்சி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை..

Asha Kaviyazhini News Tamil
X

Asha Kaviyazhini News Tamil

Asha Kaviyazhini News Tamil-அத்தாணி அருகே பயிற்சி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Asha Kaviyazhini News Tamil-ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே உள்ள குப்பாண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி தனபாக்கியம். இவர்களுக்கு யாழினி (வயது 22) என்ற மகளும், ஷாலினி என்ற மகளும் உள்ளனர். யாழினி அத்தாணி மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பயிற்சியின் நிறைவு விழாவுக்கு பள்ளிக்கு சென்று வருவதாக வீட்டில் தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, யாழினி மனமுடைந்து உள்ளார்.

இதற்கிடையே யாழினி தனது வீட்டின் ஒரு அறையை பூட்டிக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீசார் யாழினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
smart agriculture iot ai