அந்தியூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான செயல்விளக்க பயிற்சி

அந்தியூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான செயல்விளக்க பயிற்சி
X

கோப்பு படம்

அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான செயல்விளக்க பயிற்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல் விளக்க பயிற்சி முகாமில், அந்தியூர் அத்தாணி ஒலகடம் அம்மாபேட்டை நெரிஞ்சிப்பேட்டை ஆகிய 5 பேரூராட்சியில் பணிபுரியும் சுமார் 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி முகாமில் வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடியில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாள்வது குறித்த செயல் விளக்கப் பயிற்சி காண்பிக்கப்பட்டது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உதவி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!