கோபி அருகே வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு விவசாயம் குறித்த பயிற்சி

கோபி அருகே வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு விவசாயம் குறித்த பயிற்சி
X

விவசாயிகளை சந்தித்து ஆலோசனை பெற்ற வேளாண் கல்லூரி மாணவர்கள்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு விவசாயம் குறித்த பயிற்சி நடைபெற்றது.

கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு விவசாயம் குறித்த பயிற்சி நடைபெற்றது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு படிக்கும் 10 மாணவர்கள், ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் " கிராம தங்கள் திட்டம்" என்ற அடிப்படையில் இப்பகுதியில் 2 மாதங்கள் தங்கி விவசாயிகளை நேரடியாக சந்தித்து விவசாய முறைகளை கற்று கொள்கின்றனர்.

டி.என்.பாளையம் வேளாண் உதவி இயக்குநர் கார்த்திகேயன் தலைமையில் வேளாண் அலுவலர் சந்தியா, துணை வேளாண் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, உதவி வேளாண் அலுவலர் சுதா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பாரம்பரிய விவசாய முறைகளை, இம்மாணவர்கள் நேரடியாக விவசாயிகளை சந்தித்து பயிற்சி பெற்றனர்.

ஆர்கானிக் விவசாய முறை, பஞ்சகவ்யம் முறைகளை பற்றி விவசாயிகளிடம் மாணவர்கள் ஆர்வமாக கேட்டறிந்து கொண்டனர். மேலும், மாணவர்கள் அப்பகுதி விவசாயிகளுக்கு, தற்போதை நவீன தொழில்நுட்ப விவசாய முறைகளை எடுத்து கூறினர். விவசாயத்தில் தரமான விதைகளை தேர்வு செய்வது குறித்தும் வேளாண் அதிகாரிகள் முன்னிலையில் விவசாயிகளும் மாணவர்கள் ஆலோசித்தனர்.

வாழை விவசாய தோட்டத்தில் விவசாயிகளுடன் இணைந்து மாணவர்கள் மைக்கோரைசல் உயிர் உரத்தை பயிர்களுக்கு இட்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil