அந்தியூரில் இன்று வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

அந்தியூரில் இன்று வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
X

அந்தியூரில் நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்.

அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நகர்புற தேர்தல் குறித்த வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிக்கு அடுத்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று காலை அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு பேரூராட்சித் தேர்தல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேர்தல் அதிகாரிகள், தேர்தலின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில், அந்தியூர் பேரூராட்சி முதன்மை எழுத்தர் தாமரைச்செல்வி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!