அந்தியூரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்

அந்தியூரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்
X

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு, போக்குவரத்து போலீசார் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் போக்குவரத்து போலீசார் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு, போக்குவரத்து போலீசார் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமல், வெளியில் நடமாடும் நபர்களுக்கு அபராதம் விதிக்க சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு, போக்குவரத்து தலைமை காவலர் , போக்குவரத்து உதவியாளர் வாசுதேவன் ஆகியோர் ரோந்துப் பணி மேற்கொண்டு, முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தார்.

அப்போது, முகக்கவசம் அணியாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சென்ற 20-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதித்தனர். முகக்கவசம் வைத்திருந்தும் அணியாமல் வந்தவர்களுக்கு எச்சரிக்கை செய்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!