கரூர்-ஈரோடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கரூர்-ஈரோடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு
X

நீரில் மூழ்கிய பேருந்தை தள்ளும் பயணிகள்.

ஆரியங்காட்டு பாலத்தில் தேங்கிய நீரால் கரூர்-ஈரோடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோட்டிலிருந்து கணபதிபாளையம் வழியாக கரூர் செல்லும் சாலையில் சின்னம்மாபுரம் அருகே அமைந்துள்ள ஆரியங்காட்டு ரயில்வே நுழைவுபாலம். ஈரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த நுழைவு பாலத்தின் கீழ் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த சாலையி்ல் இருசக்கரவாகனங்களும், கார்களும் செல்லமுடியாத நிலை உருவானது.

இந்த நிலையி்ல் கரூரிலிருந்து பயணிகளுடன் ஈரோட்டை நோக்கி வந்த பேருந்து ஒன்று அந்த நீரில் சிக்கிக்கொண்டது. இதனால் பயணிகள் பேருந்தை விட்டு இறங்கி அந்த பேருந்தை தள்ளி அதனை வெள்ளநீரிலிருந்து மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாலத்தில் நீர்தேங்கி போக்குவரத்து தடைபட்டதால் அந்த வழியேயான போக்குவரத்து மொடக்குறிச்சி நோக்கி திருப்பி விடப்பட்டது. மேலும், பாலத்தின் அருகில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!