திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
X

பழுதாகி நின்ற லாரி.

திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதாகி நின்றதால் தமிழகம்-கர்நாடகம் இடையே கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையானது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இம்மலைப்பாதை கடந்த 10 ஆம் தேதி முதல் திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேர வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக காலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் திம்பம் மலைப் பாதை வழியாக இருபுறமும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால், அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடகத்தில் இருந்து கிரானைட் பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப்பாதையில் இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது 9 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென பழுது ஏற்பட்டு லாரி நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக சிறிய வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது. கனரக வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்