தீபாவளிக்காக ஈரோட்டில் போக்குவரத்து மாற்றம்

தீபாவளிக்காக ஈரோட்டில் போக்குவரத்து மாற்றம்
X

ஈரோடு பேருந்து நிலையம்.

தீபாவளி கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்த இடம் வசதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது: சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து பள்ளிபாளையம் வழியாக ஈரோடு வரும் பஸ்கள், காவேரி சாலை, கே.என்.கே.சாலை, மூலப்பட்டறை, கிருஷ்ணசெட்டி வீதி வழியாக ஈரோடு பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும். மணிக்கூண்டு வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள், பன்னீர்செல்வம் பூங்கா, சவிதா, வாசுகி வீதி வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும். கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து பெருந்துறை வழியாக வரும் பஸ்கள், பெருந்துறை சாலை, எம்.ஜி.ஆர்., சிலை சந்திப்பு, மேட்டூர் சாலை, ராயல் தியேட்டர் வழியாக ஈரோடு பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும். தாராபுரம், காங்கேயம், கொடுமுடி, கரூர், திண்டுக்கல் மார்க்க பஸ்கள், காளை மாட்டு சிலை, எம்.ஜி.ஆர்., சிலை சந்திப்பு, மேட்டூர் சாலை, ராயல் தியேட்டர் வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.

பொதுமக்களின் டூவீலர்களை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, கே.என்.கே., சாலை, காந்தி சிலை அருகேயும், அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியிலும், ஆர்.கே.வி., சாலை கிருஷ்ணா தியேட்டர் பகுதி, பள்ளி வேலை நாளில் மாலை, 4:00 மணிக்கு மேல் சி.எஸ்.ஐ., மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நிறுத்தலாம். நான்கு சக்கர வாகனங்களை, பார்க் சாலை ஸ்டார் தியேட்டர், சி.எஸ்.ஐ., பள்ளி வளாகத்தில் நிறுத்தலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!