கோபி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க கோபுரம் அமைப்பு

கோபி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க கோபுரம் அமைப்பு
X

பைல் படம்.

தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதி , பஸ் நிலையம் , ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதி, பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்பட முக்கியமான பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையொட்டி சத்தியமங்கலம், கோபி உட்பட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதி பகுதி மற்றும் முக்கியமான பகுதிகளில் உள்ள துணி கடைகள் மற்றும் மற்ற கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சத்தியமங்கலம் பகுதியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் மணி கூண்டு, வடக்கு பேட்டை, பஸ் நிலையம் மற்றும் காந்திநகர் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் பொதுமக்களை கண்காணித்து வருகின்றனர்.

கோபிச்செட்டிப்பாளையம்:

கோபி பஸ் நிலைய பகுதி எம்.ஜி.ஆர். சிலை ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு மக்கள் கூட்டத்தை கண் காணிக்கப்பட்டு வருகிறது.மேலும் கடை வீதி மற்றும் முக்கிய சந்திப்புகளில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது.

அந்தியூர்:

அந்தியூரில் கடைகள் உட்பட பல்வேறு துணி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையொட்டி நிலையம், காந்தி மைதானம் பஸ் நிலையம் , தேர் வீதி பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



போலீசார் ஒலி பெருக்கி மூலம் பாது காப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடை வீதிகளுக்கு வரும் மக்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும். இடைவெளி விட்டு செல்ல வேண்டும். மேலும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கடை பிடிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் எச்சரித்தனர்.

பவானி:

பவானி அந்தியூர் பிரிவு மற்றும் வி.என்.சி. கார்னர் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீசார் பொதுமக்களை கண்காணித்து வருகிறார்கள்.

பெருந்துறை:

பெருந்துறை பஸ் நிலையம், கடை வீதி உள்பட முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இதேபோல் கவுந்தப்பாடி, சித்தோடு, சென்னிமலை, சிவகிரி, நம்பியூர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள கடை வீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil