கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் அனுமதி

கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் அனுமதி
X

 கொடிவேரி அணை.

கொடிவேரி அணையில் குளிக்க நாளை முதல் (27ம் தேதி) சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

கோபி அருகே உள்ள கொடிவேரி அணை ஈரோடு மாவட்ட சுற்றுலா தலங்களில் பிரசித்து பெற்று திகழ்ந்து வருகிறது. இந்த அணைக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம் உள்பட பல்வேறு மாவட்ட மக்கள் பஸ், கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் வருவார்கள். அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.

மேலும் மக்கள் கொண்டு வரும் உணவு வகைகளை அங்கேயே அமர்ந்து சாப்பிடுவார்கள். அந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வறுவல்களை வாங்கி சாப்பிட்டு விட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சுமார் 9 மாதங்கள் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

பின்னர், அணை பராமரிப்பு காரணங்களுக்காகவும், கொரோனா 2ஆவது அலை பரவல் காரணமாக திரும்பவும் மூடப்பட்டது. கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழை அதிகமாகப் பெய்ததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்திருந்தது.

இதனால், பவானி ஆற்றில் எந்த நேரத்திலும் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு உள்ளதாகக் கருதப் பட்டதால் கொடிவேரி அணை மூடப்பட்டது.இந்நிலையில், தற்போது மழைக்காலம் முடிவடைந்துவிட்டதால், கொடிவேரி அணைக்கு சுற்றுலாப் பயணிகள் நாளை (டிச.27) முதல் அனுமதிக்கப்படுவார்கள் என பொதுப்பணித்றையினர் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil