கொடிவேரி தடுப்பணையில் நாளை (27-ம் தேதி) சுற்றுலா பயணிகளுக்கு தடை

கொடிவேரி தடுப்பணையில் நாளை (27-ம் தேதி) சுற்றுலா பயணிகளுக்கு தடை
X

கொடிவேரி அணை.

பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி தடுப்பணையில் நாளை (சனிக்கிழமை) சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி அணை வருகிறது. அங்கிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டியதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு இன்று மாலை 4 மணி நிலவரப்படி 1,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனைத்தொடர்ந்து கொடிவேரி அணை பகுதிக்குள் நாளை 27ம் தேதி (சனிக்கிழமை) சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future