கொடிவேரி தடுப்பணையில் 12வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கொடிவேரி தடுப்பணையில்  12வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
X

கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்று 12-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கடந்த, 5ம் தேதி முதல், கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகள் நுழைய, குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இன்று காலை, 3,400 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. ஆனாலும் தடுப்பணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், 12வது நாளாக இன்றும், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!