கொடிவேரி தடுப்பணையில் 3வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை

கொடிவேரி தடுப்பணையில் 3வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை
X

கொடிவேரி தடுப்பணை.

கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு மூன்றாவது நாளாக, இன்றும் தடை விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தலமாகும். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் கொடிவேரி அணைக்கு வந்து குளித்து மகிழ்வார்கள். இந்நிலையில், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனையடுத்து, கொடிவேரி தடுப்பணை வழியாக, 1,400 கன அடி நீர் நேற்று முன்தினம் வெளியேறியதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து இன்று திறக்கப்பட்ட, 5,100 கன அடி உபரிநீர், கொடிவேரி தடுப்பணை வழியாக, வெளியேறி வருகிறது.

இதன் காரணமாக தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் கொடிவேரி அனை அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை தொடர்வதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!