கொடிவேரி தடுப்பணையில் இன்று 5வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை

கொடிவேரி தடுப்பணையில் இன்று 5வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை
X

கொடிவேரி தடுப்பணை.

Kodiveri Dam - கொடிவேரி தடுப்பணையில் இன்று 5-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Kodiveri Dam -தொடர் கனமழை காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து 5,100 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொடிவேரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து கடந்த 26-ம் தேதி முதல் அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.


இந்நிலையில், பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் இன்று 5-வது நாளாக கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.


மேலும், பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தால் மட்டுமே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்யவும் குளித்து மகிழவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்