கொடிவேரி அணையில் குளிக்க நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கொடிவேரி அணையில் குளிக்க நாளை முதல்  சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
X
கொடிவேரி அணையில், பொதுமக்கள் குளிக்க நாளை முதல் அனுமதிக்கப்படுகிறது.
கடந்த 12 நாட்களுக்கு பிறகு, கொடிவேரி அணையில் நாளை (புதன்கிழமை) முதல் குளிக்கலாம் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் அணையானது கடந்த, 5ம் தேதி 102 அடியை எட்டியது. பின்னர், அணையில் இருந்து உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த தடை தொடர்ந்து இன்றுடன் 12 நாட்களாக நீடித்து வந்தது.இந்த நிலையில், பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததையடுத்து, நாளை முதல் 17ஆம் தேதி (புதன்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!