கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
X

கொடிவேரி அணை.

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதால், ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, திருப்பூர், கோவை, கரூர், சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் அதிகப்படியான, உபரிநீர் திறந்ததால், கடந்த, அக்டோபர் 12ம் தேதி முதல், கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், 75 நாட்களுக்கு பிறகு மீண்டும், டிசம்பர் 27ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஜனவரி 1 மற்றும் 2ம் தேதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை முதல், தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கடும் குளிர் நிலவுவதால், நூற்றுக்கும் குறைவான பயணிகளே வந்ததாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture