அரசு பேருந்து மீது சுற்றுலா வேன் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு

அரசு பேருந்து மீது சுற்றுலா வேன் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு
X

ராஜேஷ்குமார்.

அம்மாபேட்டை அருகே அரசு பேருந்து மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் சென்னை வாலிபர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை, மணலி, ஆண்டாள் குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேஸ்குமார் (வயது 26), பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் உள்பட 14 பேர் ஒரு சுற்றுலா வேனில் வெள்ளியங்கிரிக்கு வந்தனர். வேனை சென்னையை சேர்ந்த சந்திரசேகர் ஓட்டி வந்தார். அவர்கள் வெள்ளியங்கிரி சென்று விட்டு நேற்று இரவு வேனில் சென்னைக்கு சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் பவானி அருகே அம்மாபேட்டை அடுத்த குதிரைக்கல்மேடு என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த அரசு பேருந்து மற்றும் சுற்றுலா வேன் மோதி கொண்டது.

இதில் ராஜேஸ்குமார், பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்கு பவானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்குமார் இன்று காலை பரிதாபமாக இறந்தார். பலியான ராஜேஸ்குமார் என்ஜினீயரிங் படித்து விட்டு விவசாயம் பார்த்து வந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!