ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்
X

வேட்புமனு தாக்கல் (பைல் படம்).

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாளாகும். இதனால் கடைசி கட்ட வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாளாகும். இதனால் கடைசி கட்ட வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக ஜன.10ம் தேதி, 13ம் தேதி மற்றும் 17ம் தேதி ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கடந்த 10ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்று 3 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து, 13ம் தேதி நடந்த வேட்புமனு தாக்கலின் போது, 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, நாளை (ஜன.17ம் தேதி) வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்பதால், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் கடைசி நாளான நாளை வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, நாளை மறுநாள் (ஜன.18ம் தேதி) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற ஜன.20ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பிப்.5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8ம் தேதி பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

Tags

Next Story