ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை

ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை
X

நேதாஜி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்த தக்காளி. 

வரத்து அதிகரிப்பால் ஈரோட்டில் தக்காளி விலை கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிந்தது. இன்று தாளவாடி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 10 லாரி லோடு தக்காளி வரத்தானது. இன்று 25 கிலோ தக்காளி பெட்டி ரூ.900 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. 14 கிலோ பெட்டி ரூ 400 முதல் 500 வரை விற்பனையானது. ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ. 50 வரை விற்பனை ஆனது. வெளி இடங்களில் சில்லறையில் ரூ.50 முதல் ரூ. 60 வரை விற்பனையானது. தக்காளி விலை சரிவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai future project