ஈரோட்டில் மீண்டும் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை

ஈரோட்டில் மீண்டும் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை
X

பைல் படம்.

ஈரோட்டில் மீண்டும் காய்கறிகள் விலை அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஈரோடு வ.உ.சி.நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கும், ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.150-க்கு விற்பனையானது. இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.30-க்கு விற்பனையானது. கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. ஈரோடு மார்க்கெட்டுக்கு தினமும் 8 ஆயிரம் கிலோ தக்காளி விற்பனைக்கு வரும். தற்போது மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் இன்று 1000 கிலோ மட்டுமே விற்பனைக்கு வந்தன.

இன்றைய ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெடில் காய்கறிகள் விலை(ஒரு கிலோ) பின்வருமாறு:

தக்காளி- ரூ.150,

கத்தரிக்காய்-ரூ.150,

வெண்டைக்காய் ரூ.100.

பச்சை மிளகாய்-ரூ.100,

பீர்க்கங்காய்-ரூ.80,

பாவக் காய்-ரூ.80,

முட்டைக்கோஸ்-ரூ.50,

கேரட்-ரூ.70,

புடலங்காய் - ரூ.70,

பீன்ஸ்-80,

அவரைக்காய்-100,

சுரக்காய்-40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil