பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கூடுதுறை பரிகார மண்டபத்தில் இன்று முதல் பொதுமக்கள் பரிகார பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பரிகாரம் செய்ய 3 பேருக்கும், ஈமக்கிரியை செய்ய 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர பக்தர்கள் மற்றும் புரோகிதர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு பவானி கூடுதுறையில் இன்று முதல் பரிகாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று முதல் நாள் என்பதால் குறைந்த அளவிலான பக்தர்களே பரிகாரம் செய்ய வந்து இருந்தனர். இதனையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா? என்று கோவில் நிர்வாகத்தினர் கண்காணித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu