கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
X

கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்த நீர்வளத்துறை அதிகாரிகள்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசன நிலங்களுக்கு 2ம் போக சாகுபடிக்கு இன்று (டிச.11) தண்ணீர் திறக்கப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசன நிலங்களுக்கு 2ம் போக சாகுபடிக்கு இன்று (டிச.11) தண்ணீர் திறக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இதன் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நிலையில், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களிலுள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், இன்று (டிச.11) புதன்கிழமை முதல் அடுத்தாண்டு (2025) ஏப்ரல் 9ம் தேதி வரை 120 நாட்களுக்கு 9,849.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது.

அதன்படி, இன்று (டிச.11) காலை கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கல்பனா, உதவி பொறியாளர்கள் குமார், ரத்தினகிரி ஆகியோர் கலந்து கொண்டு மதகை திருகி தண்ணீரை திறந்து விட்டார். அப்போது வாய்க்காலில் தண்ணீர் பாய்ந்து சென்றது.

Tags

Next Story
ai and future cities