அந்தியூர் அருகே அண்ணாமார்பாளையத்தில் புகையிலை மற்றும் குட்கா விற்றவர் கைது

அந்தியூர் அருகே அண்ணாமார்பாளையத்தில் புகையிலை மற்றும் குட்கா விற்றவர் கைது
X

பைல் படம்

அந்தியூர் அருகே உள்ள அண்ணாமார்பாளை யத்தில் மளிகை கடையில் குட்கா மற்றும் புகையிலை விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அண்ணாமார்பாளையத்தில் அந்தியூர் போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது, அங்குள்ள உள்ள மளிகை கடையில் சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (47) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 பாக்கெட்டுகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story