ஈரோடு கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கிய திருப்பூர் எம்.பி. சுப்பராயன்

ஈரோடு கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கிய திருப்பூர் எம்.பி. சுப்பராயன்
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணியிடம், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கிய, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன்.

ஈரோடு கலெக்டரிடம் திருப்பூர் எம்.பி. சுப்பராயன், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினார்.

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் எச். கிருஷ்ணனுண்ணியை, திருப்பூர் எம்.பி. சுப்ப்ராயன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சந்தித்தார். அப்போது, கடந்த வாரத்தில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோபி நகரம், கோபி, நம்பியூர், டி.என்.பாளையம், அந்தியூர் மற்றும் அம்மாபேட்டை ஆகிய ஒன்றியங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தின் போது, பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட குடிதண்ணீர், வீட்டுமனை, ஓய்வூதியம், கழிப்பறை வசதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்களை சமர்பித்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags

Next Story
ai in future agriculture