அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளை திருச்செங்கோடு எம்எல்ஏ ஆய்வு

அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளை திருச்செங்கோடு எம்எல்ஏ ஆய்வு
X

விவசாயிகளிடம் மனுக்களை பெற்ற திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன்

சென்னிமலை அருகே மலையப்பாளையத்தில் நடைபெற்று வரும் அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளை திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள மலையப்பாளையத்தில், அத்திக்கடவு-அவினாசி திட்ட நீரேற்று நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிறுவனருமான ஈ.ஆர்‌.ஈஸ்வரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, தற்போது வரை முடிக்கப்பட்டுள்ள பணிகளை குறித்து கேட்டறிந்தார். பின்னர், விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை எம்எல்ஏ பெற்றுக்கொண்டார். இந்த ஆய்வின் போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் துரைராஜா , ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஈரோடு மாவட்ட வடக்கு செயலாளர் ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி