அந்தியூர் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்

அந்தியூர் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்
X

அனுமதியின்றி செம்மண்ணை கடத்தி வந்த லாரி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உரிய அனுமதியின்றி செம்மண்ணை ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

அந்தியூர் அருகே ஒட்டபாளையம் கிராமத்தில், வி.ஏ.ஒ.,ஆக பணிபுரிந்து வருபவர், முருகானந்தம், நேற்று அதிகாலையில், வி.ஏ.ஒ.,முருகானந்தம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டிப்பர் லாரி ஒன்று, ஓலகடம் – காட்டூர் செல்லும் சாலையில், வேட்டுவனூர் எனும் இடத்தில் வந்து கொண்டு இருந்த போது, அதனை நிறுத்தி சோதனை செய்ததில், அந்த டிப்பர் லாரியில் உரிய அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

பின்னர் அந்த லாரியை ஓட்டி வந்ததாக, பிரம்மதேசம், அட்டக்கல்லூர் பகுதியை சேர்ந்த, சுந்தரராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வி.ஏ.ஓ.,அந்தியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!