தாளவாடி அருகே சாலையோரத்தில் படுத்திருந்த புலிகள்

தாளவாடி அருகே சாலையோரத்தில் படுத்திருந்த புலிகள்
X

சாலையோரத்தில் படுத்திருந்த புலிகளை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தலமலை சாலையோரத்தில் படுத்திருந்த புலிகளை பார்த்த கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

தாளவாடி அருகே தலமலை சாலையோரத்தில் புலிகள் படுத்திருந்தன. அதை நேரில் பார்த்த கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர் என 2 வனக்கோட்டங்களும், சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், விளாமுண்டி, கடம்பூர், தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி என 10 வனச்சரகங்களும் உள்ளன.

தாளவாடி அருகே உள்ள தலமலை வனப்பகுதிகளில் அடிக்கடி புலிகள் நடமாடுவதாக மலைக் கிராம மக்கள் கூறுகிறார்கள். இந்நிலையில், தலமலையில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் உள்ள ராமரணை அருகே சாலையோரத்தில் 2 புலிகள் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

அப்போது, வந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் புலிகள் படுத்திப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே, தங்களது செல்போன் மூலம் புலிகள் படுத்திருந்ததை வீடியோவாக பதிவு செய்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, தலமலையில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் அவ்வப்போது புலிகள் நடமாடுகின்றன. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!