பவானி அருகே ஆற்றில் தோட்டா வீசி மீன் பிடித்த இருவர் கைது

பவானி அருகே ஆற்றில் தோட்டா வீசி மீன் பிடித்த இருவர் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஆற்றில், தோட்டா வீசி மீன்பிடித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணவாய்க்கால் ராணதோப்பு பகுதியில், பவானி ஆற்றில் தோட்டா வீசி மீன்பிடிப்பதாக, சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆற்றில் தோட்டா வீசி மீன்பிடித்த பவானி குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி மற்றும் காடப்பநல்லூர் பகுதியை சேர்ந்த உத்திரசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மீன்பிடிக்க வைத்திருந்த மற்றோரு தோட்டாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!