சித்தோடு அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

சித்தோடு அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 3 பேரை படத்தில் காணலாம்.

Smuggling News India - சித்தோடு அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Smuggling News India -ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோணவாய்க்கால் பகுதியில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

சோதனையில் சித்தோடு பகுதியை சேர்ந்த ராஜா, முருகேசன், வெங்கடேசன் ஆகிய மூவரும் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து மொத்தமாக 4 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!