தூத்துக்குடி தொழிலாளி போக்சோவில் கைது

தூத்துக்குடி தொழிலாளி போக்சோவில் கைது
X

பைல் படம்.

ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தூத்துக்குடியை சேர்ந்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்க்கும் தொழிலாளி ராஜேஷ் (வயது 31) என்பவர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இதைக்காரணமாக வைத்து ராஜேஷ் அந்த சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் மகளிர் போலீசார் ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!