ஈரோடு மாநகராட்சி 36வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.

ஈரோடு மாநகராட்சி 36வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.
X

36வது வார்டு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திருமகன் ஈவோரா எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஈரோடு மாநகராட்சி 36வது வார்டு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திருமகன் ஈவெரா எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் புதன்கிழமை மாலையுடன் முடிய உள்ள நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. வரும் 19-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.இதில் ஈரோடு மாநகராட்சி 36து வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணியில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார்.

இவருக்கு, ஆதரவு திரட்டும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அவ்வகையில் ஜின்னா வீதி, ஜின்னா வீதி பின்புறம், மார்க்கெட் சந்து, காவேரி சாலை, பாத்திரக்கடை சந்து ஆகிய பகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.வாக்கு சேகரிப்பின் போது, திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு