அத்தாணியில் கால்நடை மருத்துவர் வீட்டில் திருடியவர் கைது

அத்தாணியில் கால்நடை மருத்துவர் வீட்டில் திருடியவர் கைது
X

கைது செய்யப்பட்ட பிரபு.

அந்தியூர் அருகே அத்தாணி பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் வீட்டில் பூட்டை உடைத்து திருடிய நபரை ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பகுதியில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் சதீஷ்குமார். இவர் கடந்த மாதம் 6ஆம் தேதி தனது தீபாவளி பண்டிகை உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.உடனடியாக இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.உடனடியாக அத்தாணி பகுதியில் உள்ள டாக்டர் வீட்டிற்கு வந்து பார்த்த ஆப்பக்கூடல் போலீசார் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பரிசோதனை செய்யப்பட்டது.


பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் ரேகைகளை வைத்துப் பார்க்கும் பொழுது டாக்டர் சதீஷ் குமார் வீட்டில் திருடியது பழைய குற்றவாளி பிரபு என்பது தெரியவந்தது. உடனடியாக அத்தாணி பகுதியில் பதுங்கி இருந்த பிரபுவை போலீசார் கைது செய்தனர். மேலும், பிரபுவிடம் இருந்து வெள்ளிக் கொலுசுகள் வெள்ளி பொருட்கள் தங்க காசு மற்றும் பணம் 5 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் குற்றவாளி பிரபுவை பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
how can ai be used in business