ஈரோட்டில் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

ஈரோட்டில் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
X

ஆட்டோ தீப்பற்றி எரிந்த காட்சியை படத்தில் காணலாம்.

ஈரோட்டில் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோட்டில் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு ஜின்னா வீதியை சேர்ந்தவர் காதர்மொய்தீன் (வயது 48). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஒட்டி வருகிறார். இவர், நேற்று முன்தினம் (டிச.20) இரவு வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று (டிச.21) நள்ளிரவு 2.30 மணி அளவில் திடீரென அவரது ஆட்டோ தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக் கண்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த காதர்மொய்தீனிடம் தெரிவித்தனர்.

உடனே அவர் இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் ஆட்டோ முழுவதுமாக எரிந்து நாசமானது. ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் தீயணைப்பு வீரர்களுக்கு தெரியவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நள்ளிரவில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!