ஈரோடு: ஆப்பக்கூடலில் நூலக இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு!

ஆப்பக்கூடலில் நூலக இடத்தை அளவீடு செய்ய விடாமல் பெண்கள் எதிரப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் சாலையில் உள்ள ஜோதி வீதியில் தமிழக அரசின் பொது நூலகத்துறை சார்பில் கிளை நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கூடுதல் கட்டிடம் கட்டும் இடத்தில் எல்லை கற்கள் நட விடாமலும், கம்பி வேலியை அமைக்க விடாமலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து நூலகர் செந்தில்குமார் நூலக இடத்தை மீட்டு கொடுக்கும்படி பவானி தாசில்தாரிடம் மனு கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, பவானி தாசில்தார் சித்ரா நூலக இடத்தை அளவீடு செய்து எல்லை கற்கள், கம்பி வேலி அமைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், ஆப்பக்கூடல் கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் தலைமையில் வருவாய் துறை அதிகாரி கள் நேற்று நூலக இடத்தை அளவீடு செய்தார். அப்போது, நூலக இடத்தை அளவீடு செய்ய விடாமல் தடுத்து நிறுத்திய பெண்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து, ஆப்பக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இந்த இடம் குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் வழக்கு முடிந்து தீர்ப்பு வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, நூலக இடத்தை அளவீடு செய்த அதிகாரிகள் எல்லை கற்களை நடாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu