சென்னிமலை செல்போன் கடையில் திருட்டு

சென்னிமலை செல்போன் கடையில் திருட்டு
X

பைல் படம்.

சென்னிமலை அருகே செல்போன் கடையில் 40 ஆயிரம் மதிப்புள்ள 25 செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்கள்.

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, வயது (36) . இவர் கடந்த 10 வருடங்களாக சென்னிமலை அருகே ஈங்கூரிலுள்ள சிப்காட் செல்லும் ரோட்டில் செல்போன் கடை வைத்துள்ளார். இவரது கடையில் நாகபட்டினத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் கடையில் இருந்தவர்கள் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

பின்னர் காலையில் கடையில் வேலை செய்யும் ராஜேஷ் வந்து கடையை திறந்தபோது கடையின் மேற்கூரை ஒடு பிரிக்கப்பட்டு இருந்தது. மேலும் கடையில் விற்பனைக்காக இருந்த 5 செல்போன்களும், பழுது நீக்குவதற்காக வாடிக்கையாளர்கள் கொடுத்திருந்த 20 செல்போன்கள் திருட்டு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும். அதுதவிர பணப்பெட்டியில் எண்ணி வைக்காமல் வைத்திருந்த பணமும் காணாமல் போயிருந்தது. இதைத்தொடர்ந்து சத்தியமூர்த்தி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare