குமரி திருவள்ளுவர் சிலை உருவத்துடன் போர்வை: சென்னிமலை வடிவமைப்பாளர் அபாரம்
திருவள்ளுவர் சிலை உருவத்தை போர்வையில் வடிவமைத்த வடிவமைப்பாளர் அப்புசாமி.
சென்னிமலையில் குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை உருவத்தை வடிவமைப்பாளர் போர்வையில் வடிவமைத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கைத்தறி துணிகள் வடிவமைப்பாளராக பணிபுரிபவர் அப்புசாமி. தற்போது போர்வை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் பிரபல அரசியல் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் உருவத்தினை அப்படியே போர்வையாக வடிவமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் உருவச் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் வகையில், திருவள்ளுவர் சிலை உருவத்தை தத்ரூபமாக போர்வையாக உருவாக்கி உள்ளார்.
காட்டன் நூல் மூலம் 28 அங்குல அகலம் மற்றும் 77 அங்குல நீளத்தில் இந்த போர்வை தயார் செய்யப்பட்டு உள்ளது. இதன் எடை அரை கிலோ ஆகும். இப்போர்வையை முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசளிக்க உள்ளதாக வடிவமைப்பாளர் அப்புசாமி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu