மெல்லச் சரிந்து வரும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

மெல்லச் சரிந்து வரும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம்
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் மெல்ல சரிந்து வருகிறது.

பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் மெல்ல சரிந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி நீர்மட்ட உயரம் கொண்டது ஆகும். இந்த அணையின் மூலம் ஈரோடு உள்பட மூன்று மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

அங்கு பெய்யும் மழையைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து நேற்று (செப்.7) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,431 கன அடியாக இருந்த நிலையில், இன்று (செப்.8) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,128 கன அடியாக சரிந்தது.

இந்நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கன அடி, அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் 750 கன அடி, காலிங்கராயன் வாய்க்காலில் 100 கன அடி, குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி என மொத்தம் வினாடிக்கு 3,250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மெல்ல சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் (செப்.6) காலை 95.97 அடியாக இருந்த பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று (செப்.7) காலை 95.78 அடியாக சரிந்தது. இன்று (செப்.8) காலை 95.58 அடியானது. மேலும், அணையில் நீர் இருப்பு 25.55 டிஎம்சியிலிருந்து 25.40 டிஎம்சியாக குறைந்தது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil