பவானிசாகர் அணையில் 105 அடியை நெருங்கும் நீர்மட்டம்

பவானிசாகர் அணையில் 105 அடியை நெருங்கும் நீர்மட்டம்
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்குகிறது; வினாடிக்கு 2,431 கன‌ அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

எனினும் மிதமான அளவு தண்ணீர் தொடர்ந்து வருவதால் பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை நெருங்கி உள்ளது.

பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்ட, இன்னும் குறைந்த அளவு தண்ணீரை தேவைப்படுகிறது. இதனால் அணையில் இருந்து எந்நேரமும் உபரி நீர் திறக்கப்படும் என்பதால் பொதுப்பணித்துறை சார்பில் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் அணையின் நீர்வரத்தை, பவானிசாகர் அணை பிரிவு உதவி செயற்பொறியாளர் பாலாஜி தலைமையில் பொதுப்பணித்துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி, பவானிசாகர் அணை 104.77 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,431 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,800 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 500 கனஅடி, ஆற்றுக்கு 100 பவானி கன அடி என மொத்தம் 2,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!