பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,377 கன அடியாக அதிகரிப்பு!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,377 கன அடியாக அதிகரிப்பு!
X
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (மே.14) காலை 8 மணி நிலவரப்படி 152 கன அடியில் இருந்து 2,377 கன அடியாக அதிகரித்தது.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (மே.14) காலை 8 மணி நிலவரப்படி 152 கன அடியில் இருந்து 2,377 கன அடியாக அதிகரித்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை 105 அடி உயரம் கொண்டது ஆகும். இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இம்மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் அணையின் நீர்வரத்து வழித்தட ஆதாரங்களாக உள்ளன.

இந்த நிலையில், பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. நேற்று (மே.13) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 152 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே.14) காலை 8 மணி நிலவரப்படி, வினாடிக்கு 2,377 கன அடியாக அதிகரித்தது. அப்போது, அணையின் நீர் மட்டம் 68.56 அடியாகவும், நீர் இருப்பு 10.36 டி.எம்.சி. ஆகவும் இருந்தது.

அதேபோல், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 150 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடியும் என மொத்தம் 155 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

Next Story