மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 51 கன அடி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 51 கன அடி
X

மேட்டூர் அணை.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 51 கன அடியாக இருந்தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 51 கன அடியாக இருந்தது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி கடும் வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் வினாடிக்கு 300 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 200 கன அடியாக சரிந்துள்ளது.

அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று (5ம் தேதி) வினாடிக்கு 62 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (6ம் தேதி) வினாடிக்கு 51 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 58.70 அடியாக இருந்து நீர்மட்டம், இன்று 58.42 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 23.52 டிஎம்சியாக உள்ளது.

Tags

Next Story
scope of ai in future