மேட்டூர் அணையின் நீர்வரத்து 389 கன அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்வரத்து 389 கன அடியாக சரிவு
X

மேட்டூர் அணை.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 795 கன அடியிலிருந்து 389 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 795 கன அடியிலிருந்து 389 கன அடியாக குறைந்துள்ளது.

தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு உயிர் நாடியாக விளங்கும் மேட்டூர் அணை காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 120 அடி உயரமும், 93.47 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது.

இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று (மே.29) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 795 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 389 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி 47.31 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 47.04 அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 15.99 டிஎம்சியாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!