பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,638 கன அடியாக அதிகரிப்பு!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,638 கன அடியாக அதிகரிப்பு!
X
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (மே.20) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,638 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (மே.20) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,638 கன அடியாக அதிகரித்துள்ளது.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டுப்பட்டுள்ள் பவானிசாகர் அணை விளங்குகிறது. இதன் நீர்ப்பிடிப்பு உயரம் 105 அடியாகும். நேற்று (மே.19) திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 427 கன அடியாக இருந்தது. அப்போது, அணையின் நீர்மட்டம் 69.22 அடியாக இருந்தது.

இந்தநிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது. அதன்படி, அணைக்கு இன்று (மே.20) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,638 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், அணையின் நீர்மட்டமும் 69.30 அடியாக அதிகரித்தது. அதேசமயம், அணையில் இருந்து வினாடிக்கு 155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Next Story
கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலினின் நிவாரண அறிவிப்பு!